News September 5, 2025
தர்மபுரியில் நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள்

தருமபுரி மாவட்டத்தில் 9 ஆசிரியர்கள் தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்ட்டுள்ளனர். ஆயாமரத்துப்பட்டி எழிலரசி, குழிப்பட்டி கோவிந்தசாமி, கெங்கனஹள்ளி சரவணன், பையர்நத்தம் வெங்கடாசலம், பென்னாகரம் விஜயலட்சுமி, கோணங்கிநாயக்கனஹள்ளி ராமகிருஷ்ணன், இராமகொண்டஹள்ளி சுப்ரமணி, மாரண்டஹள்ளி மணிவண்ணன், தர்மபுரி சுரேஷ்குமார் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 5, 2025
தர்மபுரி: கடைக்கு போறதுக்கு முன் இத பாருங்க

கடைகளில் கூடுதல் விலைக்கு (ம) காலாவதியான பொருட்களை விற்கும் போது மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்யலாம். இதில் வக்கீல் இன்றி நாமே புகார் செய்து உரிய நஷ்டஈடு பெற முடியும். confo-dh-tn@nic.in என்ற இ-மெயிலில், 044-25340050 (மாநில ஆணையம்) (அ ) மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க. <<17618164>>தொடர்ச்சி<<>>
News September 5, 2025
நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்வது எப்படி ?

கடைகள் மட்டுமல்லாது பணம் கொடுத்து பெறப்படும் அனைத்து சேவைகளும் இதில் அடங்கும். எடைகுறைவு, மோசமான சேவை, ஏமாற்றுதல், போலி நிறுவனங்கள் போன்ற சூழ்நிலைகளில் புகார் செய்யலாம். மாவட்ட நுகர்வோர் மன்றங்களில் புகார் செய்யும் போது ரசீது, வீடியோ, புகைப்படங்கள் போன்ற ஆதாரங்களை கையில் வைத்திருக்க வேண்டும். அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் ஷேர் பண்ணுங்க
News September 5, 2025
தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ரவிச்சந்திரன் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்புஎண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!