News September 7, 2025
தர்மபுரியில் காவலர் தினம் கொண்டாட்டம்

தருமபுரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று காவலர் தினம் கொண்டாடப்பட்டது. இதில், பணியின் போது உயிரிழந்த தருமபுரி மாவட்ட போலீசார் நினைவாக வைக்கப்பட்டிருந்த நினைவுத் தூணுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. S. மகேஸ்வரன் மற்றும் பிற உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும், காவல்துறை வரலாற்றை விளக்கும் புகைப்படங்கள் மற்றும் துப்பாக்கி கண்காட்சியையும் தொடங்கி வைத்தனர்.
Similar News
News September 8, 2025
தருமபுரி மக்களே விலை தெரிஞ்சுக்கோங்க

தருமபுரி உழவர் சந்தையில் இன்று (செப்டம்பர்-8) காய்கறிகளின் விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, ஒரு கிலோ தக்காளி ரூ.15, கத்தரிக்காய் ரூ.22, வெண்டைக்காய் ரூ.10, அவரைக்காய் ரூ.30, முள்ளங்கி ரூ.15, முருங்கைக்காய் ரூ.55, பச்சைமிளகாய் ரூ.40, பெரிய வெங்காயம் ரூ.28, இஞ்சி ரூ.88, உருளைக்கிழங்கு ரூ.30, கேரட் ரூ.58, பீட்ரூட் ரூ.28, பீன்ஸ் ரூ.70 என விற்பனை செய்யப்படுகிறது.
News September 8, 2025
தர்மபுரி மாவட்டம் – ஓர் பார்வை

▶️ வருவாய் கோட்டங்கள்: 2 (தர்மபுரி, அரூர்)
▶️ தாலுகா: 7
▶️ வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் (ஊராட்சி ஒன்றியங்கள்): 10
▶️ வருவாய் கிராமங்கள்: 470
▶️ நகராட்சிகள்: 2 (தர்மபுரி, அரூர்)
▶️ பேரூராட்சிகள்: 10 (கம்பைநல்லூர், கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாளையம், பென்னாகரம், காரிமங்கலம், மாரண்டஹள்ளி, பாலக்கோடு, பி. மல்லாபுரம், கூத்தப்பாடி)
▶️ கிராம ஊராட்சிகள்: 251
News September 8, 2025
தர்மபுரி: சூதாட்டத்தில் ஈடுபட்ட மூவர் கைது

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு எண்டப்பட்டி மாரியம்மன் கோயில் அருகே, சூதாட்டத்தில் ஈடுபட்ட முருகன் (49), செல்வம் (60), மாது (56) ஆகிய மூவரையும் போலீசார் நேற்று மாலை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சீட்டுக் கட்டுகளும், ₹150 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து, பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.