News November 15, 2024

தர்மபுரியில் உறுதியளித்த எம்பி 

image

2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே தூள்செட்டி கால்வாய் பணிகள் நிறைவேற்றப்படும் எனவும், தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்து வருவதாகவும், மேலும் தருமபுரி மாவட்டத்தை முன்னேற்றம் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மணி பாலக்கோட்டில் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 9, 2026

தருமபுரி மாவட்டம்- ஓர் பார்வை!

image

1. நகராட்சி- 1(தருமபுரி)
2. பேரூராட்சிகள்- 10
3. வருவாய் கோட்டம்- 2
4. தாலுகா-7
5. வருவாய் குறுவட்டம்- 23
6. வருவாய் கிராமங்கள்-479
7. ஊராட்சி ஒன்றியம்-9
8. கிராம பஞ்சாயத்து- 251
9. MP தொகுதி-1 ( தருமபுரி)
10. MLA தொகுதி- 5
11. மொத்த பரப்பளவு – 4497.77 ச.கி.மீ
இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!

News March 9, 2026

தருமபுரியிலிருந்து திருச்சி நோக்கி ஆ.மணி எம்.பி அழைப்பு

image

தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வக்கீல் ஆ. மணி எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய திருச்சி சிறுகனூரில் இன்று (திங்கட்கிழமை) தி.மு.க. மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில் பங்கேற்க தருமபுரி மாவட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

News March 9, 2026

தருமபுரி: கால்வாயில் விழுந்து முதியவர் பரிதாப மரணம்

image

அரூர் அருகே கூக்கடப்பட்டியைச் சேர்ந்த சென்னகிருஷ்ணன்(70), வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று சாலையோரப் பாலத்திலிருந்து கீழே உள்ள கழிவுநீர்க் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்தார். அவரது உடல் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகப் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இச்சம்பவம் குறித்துக் கோபிநாதம்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!