News August 21, 2025
தர்மபுரியில் இலவச சுயதொழில் பயிற்சி

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள RSETI தொழில் பயிற்சி நிறுவனத்தில் கட்டுமானம் மற்றும் கான்கிரீட் இலவச தொழிற்பயிற்சி வழங்கப்பட உள்ளது. உணவு, உடை, பயிற்சி அனைத்தும் முற்றிலும் இலவசம். பயிற்சி முடிந்த பின்னர் தொழில் தொடங்க ஆலோசனை வழங்கப்படும். முன்பதிவு அவசியம். விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.8.2025 மேலும் விவரங்களுக்கு: 04342230511, 6383147667ஐ தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News February 1, 2026
தருமபுரி போலீசாரின் மின்னல் வேக வேட்டை – இருவர் கைது!

தருமபுரி மாவட்டம், பாளையம் அருகே கோம்பை கிராமத்தில், நேற்று (ஜன.31) சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வேலுசாமி, சிந்தாமணி ஆகியோரை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 28 மது பாட்டில்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. ரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த அதிரடி சோதனையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
News February 1, 2026
தருமபுரி: பள்ளியில் வெடித்த வன்முறை – மாணவனுக்கு தர்மஅடி!

தருமபுரி இலக்கியம்பட்டி அரசுப் பள்ளியில் நேற்று (ஜன.31) தேர்வு எழுத வந்த மிட்டாநூல் அள்ளி பள்ளி மாணவர்களை, உள்ளூர் மாணவர்கள் கிண்டல் செய்தனர். இதனைத் தட்டிக்கேட்ட பிரபாகரன் என்ற மாணவன் சரமாரியாகத் தாக்கப்பட்டதில் கை எலும்பு முறிந்தது. காயமடைந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் பெற்றோர்கள் கண்ணீர் மல்கக் கோரிக்கை.
News February 1, 2026
தருமபுரி: இரவு ரோந்துப் பணி ஆய்வாளர்கள் விவரம்

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (ஜன.31) இரவு முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் பச்சமுத்து தொப்பூரில் பிரபாகரன் , மதிகோன்பாளையத்தில் சிவகுமார் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!


