News August 10, 2025
தர்மபுரியில் இறைச்சி, மீன் விலை நிலவரம்

தர்மபுரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி விற்பனை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். இன்று (10.08.2025) நிலவரப்படி, பிராய்லர் கோழி கிலோ ரூ.200, நாட்டுக்கோழி கிலோ ரூ.400, ஆட்டுக்கறி கிலோ ரூ.700 என விற்கப்படுகிறது. மீன் வகைகளில், ரோகு மீன் கிலோ ரூ.200, கட்லா மீன் கிலோ ரூ.220, பாறை மீன் கிலோ ரூ.240, விவசாய மீன் கிலோ ரூ.120க்கு விற்கப்படுகிறது.
Similar News
News August 11, 2025
தருமபுரி: பரோடா வங்கியில் வேலை; பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள 417 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு 24- 42 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.48,480 -ரூ.93,960 வரை சம்பளம் வழங்கப்படும். பணிக்கேற்ப கல்வி தகுதி வரைமுறை செய்யப்பட்டுள்ளது. விவரங்களுக்கு (ம) விண்ணப்பிக்க <
News August 11, 2025
கார் மோதி விவசாயி பலி

பாப்பிரெட்டிப்பட்டி மஞ்சவாடி பகுதியைச் சேர்ந்த 48 வயது விவசாயி குப்புசாமி, டிவிஎஸ் எக்செல் வாகனத்தில் சென்றபோது, கார் மோதி படுகாயமடைந்தார். பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சேலம் ஜிஹெச்சிற்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News August 10, 2025
தருமபுரி மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட் 10) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் வெளியிட்டுள்ளது. தலைமை அதிகாரியாக A. சிவராமன் நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி கண்ணன் , அரூர் வசந்தா , பென்னாகரம் குமரவேல் பாண்டியன், மற்றும் பாலக்கோடு வெங்கட்ராமன் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பொதுமக்கள் அவசர தேவை எனில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.