News September 12, 2024

தர்மபுரியில் அவசர சிகிச்சை சிறப்பு பிரிவு

image

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.24 கோடியில் நவீன அவசர சிகிச்சை சிறப்பு பிரிவு விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது என உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் நாகவேந்தன் கூறியுள்ளார். விபத்துகளில் படுகாயம் அடைவோருக்கு தேவையான உயிர் காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்படும் எனவும் இந்த அவசர சிறப்பு சிகிச்சை பிரிவிற்கான பணிகள் இறுதிகட்ட நிலையில் உள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.

Similar News

News November 20, 2024

தருமபுரி கலெக்டர் எச்சரிக்கை

image

தருமபுரியில் 24 மணி நேரமும் இயங்கி வரும் மகப்பேறு மருத்துவமனைகளில் ஒரு மகப்பேறு பணி மருத்துவர் கட்டாயமாக பணியில் இருக்க வேண்டும். இனிவரும் காலங்களில் அரசு, தனியார் மருத்துவமனையில் மகப்பேறு மரணங்கள் ஏற்பட்டால், மருத்துவமனைகள் முறைப்படுத்துதல் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News November 20, 2024

தர்மபுரி மாவட்டத்தில் பெயர் சேர்த்தல் நீக்கல் முகாம்

image

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் நீக்கல் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் நவம்பர் 23/11/2024 மற்றும் 24/11/2024 இரண்டு நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. புதிய வாக்காளர் மற்றும் பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. 

News November 20, 2024

கழிவறை இல்லாத பயனாளிகளுக்கு பணி உத்தரவு

image

உலக கழிப்பறை தினம் விழிப்புணர்வு வாரமாக நேற்று முதல் டிச 20 மனித உரிமைகள் தினம் வரை அனைத்து ஊராட்சிகளிலும் ஊராட்சி வாரியாக ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு ஊராட்சி அளவில் செயல்பாட்டில் இல்லாத சமுதாயம் சுகாதார வளாகங்களை கண்டறிந்து IMISவலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் கழிவறை இல்லாத பயனாளிகளுக்கு பணி உத்தரவு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.