News May 7, 2025
தர்பூசணி பழத்தில் கலப்படம் இல்லை – தோட்டக்கலைத்துறை

தர்பூசணி பழங்களில் கலப்படம் செய்யப்படுவதாக உண்மைக்கு முரணான செய்தி பரவியது. இதையடுத்து தர்பூசணி அதிகம் விளையும் மாவட்டங்களில் உணவு பாதுகாப்புத் துறையினருடன் இணைந்து ரசாயன ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தர்பூசணி பழத்தில் சுவைக்காக செயற்கை ரசாயனம் கலப்படம் இல்லை என தெரிய வந்துள்ளது. எனவே மக்கள் தயக்கமின்றி தர்பூசணி பழங்களை சாப்பிடலாம். இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
Similar News
News May 7, 2025
ராமநாதபுரம் மாவட்ட இரவு நேர ரோந்து பணி விவரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மே 1) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் விவரங்கள் வெளியிட்டுள்ளனர். இரவு நேரங்களில் தங்களுக்கு ஏதேனும் அவசர தேவை ஏற்பட்டால் புகைப்படத்தில் இருக்கும் எண்களை தொடர்பு கொண்டு அவர்களை உதவிக்கு அழைக்கலாம்.
News May 7, 2025
இறந்து அழுகிய நிலையில் கணவன் – மனைவி உடல்கள் மீட்பு

காட்டு பரமக்குடி மேலத்தெரு பகுதியில் உள்ள வீட்டில், இன்று இறந்து அழுகிய நிலையில் நாகசுப்பிரமணியன்(75) மற்றும் அவரது மனைவி தனலட்சுமி(70) ஆகியோரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்களா? இல்லை கொலை நடந்துள்ளதா? என்பது குறித்து ராமநாதபுரம் தடவியல் துறை போலீசார் உதவியுடன், பரமக்குடி நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News May 7, 2025
திருஉத்தரகோசமங்கை சித்திரை திருவிழா நிகழ்ச்சி விவரம்

திரு உத்தரகோசமங்கையில் அமைந்துள்ள மங்களநாதர் – சமேத மங்களநாயகி அம்மன் ஆலயம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பலரும் எதிர்பார்த்த அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோயிலில் சித்திரை திருவிழா நிகழ்ச்சியின் அழைப்பிதழ் நேற்று(ஏப்.30) வெளியிடப்பட்டது. இன்று 01.05.2025 முதல் 12.05.2025
(சித்திரை 18 – 29) வரையிலான திருவிழாவின் நிகழ்ச்சி விவரங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.*ஷேர் பண்ணுங்க