News March 23, 2025

தர்பூசணி சாப்பிடுபவர்களுக்கு எச்சரிக்கை

image

ரசாயனம் கலக்கப்பட்ட தர்பூசணியை சாப்பிடும்போது நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு, புற்றுநோய் போன்ற ஆபத்துகள் வருமென மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தர்பூசணி பழங்களை வெட்டி பஞ்சு அல்லது டிஷ்யூ பேப்பர் கொண்டு துடைத்தால் நிறம் அதில் ஒட்டிக் கொண்டால் அது ரசாயன கலப்பு கொண்ட பழம். எனவே, கடைகளில் வாங்கும்போது அதில் எங்காவது துளையிடப்பட்டு இருக்கிறதா என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஷேர் பண்ணுங்க

Similar News

News August 26, 2025

காஞ்சிபுரத்தில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் தொடக்கம்

image

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகள் காலை உணவு நாள்தோறும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. முதலில் மாநகராட்சிகளில் தொடர்ந்து தற்போது அனைத்து பகுதிகளிலும் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளிலும் இதன் விரிவாக்கம் இன்று (26.08.2025) முதல் செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் 20 பள்ளிகளில், 871 மாணவர்களும் 1499 மாணவிகளும் என மொத்தம் 2370 பேர் பயன் பெறுகின்றனர்.

News August 25, 2025

நாளை இங்கெல்லாம் ’உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட மிலிட்டரி ரோடு தனலட்சுமி திருமண மண்டபம், குன்றத்தூர் நகராட்சி, முருகன் கோயில் ரோடு ராமச்சந்திரா மஹால், காவனூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகிலும், வாலாஜாபாத் வாரணவாசி SL நாதன் திருமண மண்டபம் , காஞ்சிபுரம் கீழம்பி ஊராட்சி மன்ற அலுவலகம், கொல்லச்சேரி குன்றத்தூர் மெயின் ரோடு, ஏ.பி.எஸ் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.

News August 25, 2025

காஞ்சிபுரம்: B.Sc, B.CA, M.Sc படித்தவர்களுக்கு அரசு வேலை

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 41 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc,BCA, MCA, M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் வைவா நடத்தப்படும். விருப்பமுள்ளவர் <>இந்த லிங்கில்<<>> வரும் செ.9க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!