News November 23, 2025
தருமபுரி: HOUSE OWNER பிரச்சனையா? இத பண்ணுங்க!

வாடகை வீட்டில் வசிப்பவர்களா நீங்கள்? வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்டால் கவலைப்படாதீர்கள். உங்களின் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.
Similar News
News February 17, 2026
அறிவித்தார் தருமபுரி ஆட்சியர்!

தருமபுரி மாவட்ட பள்ளி கல்வித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து நடத்தும் 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நாளை (பிப் 18) நடைபெற உள்ளது. பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை 9:30 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது. எனவே இந்த வாய்ப்பை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.
News February 17, 2026
தருமபுரியில்: ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி!

தண்டுக்காரன் அள்ளியை சேர்ந்தவர்கள் சிலம்பரசன் (29), முகமதுசையத் (26), ரூபன்குமார் (28). நேற்று இவர்கள் 3 பேரும் ஒரே பைக்கில் கொலசனஅள்ளி -வெள்ளிச்சந்தை சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே சென்ற லாரியை முந்தி செல்ல முயன்ற போது பைக் விபத்துக்குள்ளானது. இதில் சிலம்பரசன் பரிதாபமாக இறந்தார், மற்ற 3 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து மகேந்திரமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News February 17, 2026
தருமபுரி: ரோந்து பணி காவலர்கள் விவரம்

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (பிப்-16) இரவு முதல் இன்று காலை (பிப்-17) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


