News December 16, 2025
தருமபுரி: விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் தேதி அறிவிப்பு!

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 19.12.2025 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அதியன் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. எனவே தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான கருத்துகளை கூறி பயனடையுமாறு ஆட்சியர் சதிஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 19, 2025
தருமபுரி: மகள் இழப்பை தாங்க முடியாமல் தாய் தற்கொலை!

மாரண்டஅள்ளி சீரியம்பட்டியைச் சேர்ந்த காயத்ரி (42), தனது மகள் கீர்த்தனா 7 மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டதால் கடும் மனவேதனையில் இருந்துள்ளார். இதனால் ஏற்பட்ட விரக்தியில், வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மாத்திரைகளை உட்கொண்டு காயத்ரி தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News December 19, 2025
தருமபுரி: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (டிச.18) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சந்திரசேகர தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் நாகராஜன, தோப்பூரில் கேசவன், மதிகோன்பாளையத்தில் சின்னசாமி மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். இரவு வேலை செய்யும் பெண்களுக்கு பகிரவும்.