News October 31, 2025
தருமபுரி: விபத்தில் ஒருவர் சம்பவ இடத்துலயே பலி

தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் நேற்று (அக். 30) இரவு சுமார் 8 மணியளவில், தொப்பூரை நோக்கிச் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது நான்கு சக்கர வாகனம் மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகன ஓட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News October 31, 2025
தருமபுரி: அசையும் சொத்துக்கள் பொது ஏலம்

தருமபுரியில் PVT Ltd நிறுவனத்திற்குச் சொந்தமான அசையும் சொத்து, தருமபுரி தகுதி பெற்ற அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்களால் வருகின்றன நவ.12 அன்று முற்பகல் 11.00 மணியளவில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள, முல்லை கூட்டரங்கில் பொது ஏலம் விடப்பட உள்ளது. ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் மற்றும் அனைவரும் இந்த ஏலத்தில் கலந்து கொள்ளலாம். என ஆட்சியர் சதிஸ் தெரிவித்தார்.
News October 31, 2025
தருமபுரி: தீராத பிணி தீர்க்கும் தீர்த்தமலை கோவில்

தருமபுரியின் பழைமையான கோயில்களுள் ஒன்று “தீர்த்த மலை தீர்த்தகிரிசுவரர் கோயில்”. இக்கோயிலை பற்றி கி.பி 16 ஆம் நூற்றாண்டில் சைவ எல்லப்ப நாவலர் தீர்த்தகிரிப் புராணத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் சாமியை உள்ளார்ந்து வேண்டினால் நோய் தீர்க்கும் சக்திகோக்கண்டது என கூறுவார். பின் ராம தீர்த்தம், அகத்திய தீர்த்தம், அக்கினி தீர்த்தம், குமார தீர்த்தம், கௌரி தீர்த்தம் ஆகிய 5 தீர்த்தங்கள் இதன் சிறப்பம்சமாகும்.
News October 31, 2025
தருமபுரி: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

தருமபுரி மாவட்டத்தில் தற்போது மழை பெய்து வருவதால் கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.


