News November 24, 2025
தருமபுரி: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) தருமபுரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரிய படுத்துங்க
Similar News
News November 26, 2025
தர்மபுரி: எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை!

இலக்கிய திறன்களை மேம்படுத்தும் நோக்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் மூலம் 2024–2025 ஆண்டிற்கான 11 சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள் தேர்வு செய்யப்படுகின்றன. தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு எழுத்தாளருக்கும் தலா ரூ.1,00,000 உதவித்தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
News November 26, 2025
தர்மபுரி: வீட்டு வாசலில் வாலிபர் சடலம் !

காரிமங்கலம் அருகே, பெரியாம்பட்டி அடுத்த, ஜொல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சரவணன்(32) என்ற திருமணம் ஆகாத நபர் தனது வீட்டின் முன்பாக ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இது குறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 26, 2025
ஒகேனக்கல்: போதையில் குளித்த வட மாநில இளைஞர் பலி

தர்மபுரி: பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மதுபோதையில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கிய பிகாா் மாநில இளைஞரின் உடல் இரண்டு நாள்களுக்குப் பிறகு நேற்று(நவ.25) செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.


