News August 10, 2025
தருமபுரி: ரயில்வேயில் சூப்பர் வேலை; கைநிறைய சம்பளம்

ரயில்வேயில் மருத்துவப் பிரிவில் செவிலியர் கண்காணிப்பாளர், பார்மசிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 434 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 12th, நர்சிங், B.Pharma என பணிகளுக்கு ஏற்றவாறு கல்வி தகுதி மாறுபடும். மாதம் ரூ.25,500-ரூ.44,900 வரை சம்பளம் வழங்கப்படும். 18- 40 வயது உள்ளவர்கள் <
Similar News
News November 15, 2025
தருமபுரி: இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (நவ.14) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் நெடுஞ்செழியன், தோப்பூரில் ஜீலான்பாஷா , மதிகோன்பாளையத்தில் குமார் மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.
News November 14, 2025
சருமபுரி: குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழி

தருமபுரி பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் இன்று (நவ.14) வாசித்தார். பின் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவி மாணவியர்கள் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். உடன் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
News November 14, 2025
குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் ஆட்சியர் கையெழுத்து

தருமபுரி பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், இன்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணி துவக்கி வைத்தார்கள். உடன் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.லோகநாதன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கலந்து கொண்டனர்.


