News December 1, 2025
தருமபுரி: மினி லாரி மோதி தந்தை, மகன் பரிதாப பலி!

தருமபுரி: இருமத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் தனது மகன் திருஞானத்துடன் பைக்கில் வந்து கொண்டிருந்துள்ளார்.செங்கல்மேடு பகுதியில் வந்தபோது, பின்னல் வந்த மினி லாரி மோதியதில் நிலைதடுமாறி கிழே விழுந்தனர். இந்த விபத்தில் தந்தை மகன் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 1, 2025
தருமபுரி: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

தமிழ்நாடு இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் (Gig Workers Welfare Board) பதிவு செய்துள்ள 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கு இங்கே <
News December 1, 2025
தருமபுரி: 2,147 செவிலியர் பணியிடங்கள்- நேர்காணல் இல்லை!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News December 1, 2025
தருமபுரி: தோட்டத்திற்கு சென்ற விவசாயிக்கு ஏற்பட்ட சோகம்!

மல்லசமுத்திரத்தை சேர்ந்த விவசாயி முனிவேல் (65), நேற்று முன்தினம் தோட்டத்திற்கு சென்றுள்ளார். ஆனால் மாலை நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், சந்தேகமடைந்த குடும்பத்தார் தோட்டத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது கிணற்றின் அருகே மண் சரிந்துள்ளதை பார்த்துள்ளனர். அதன் அடிப்படையில் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், கிணற்றில் இறங்கிய வீரர்கள் முனிவேலின் சடலத்தை மீட்டு வந்தனர்.


