News August 12, 2025

தருமபுரி மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

image

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட் 12) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் வெளியிட்டுள்ளது‌. தலைமை அதிகாரியாக R. குணவர்மன்
நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி புஷ்பராணி, அரூர் ஆதமலி, பென்னாகரம் முரளி , மற்றும் பாலக்கோடு பார்த்திபன் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பொதுமக்கள் அவசர தேவை எனில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 13, 2025

தருமபுரி மக்களே.. இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

image

நம்ம தருமபுரி மாவட்டத்தை பற்றி தெரிஞ்சுக்கலாமா?
▶️நகராட்சி- (2)
▶️பேரூராட்சிகள்- (15)
▶️வருவாய் கோட்டம்- (2)
▶️தாலுகா- (7)
▶️வருவாய் வட்டங்கள் – (7)
▶️வருவாய் கிராமங்கள்- (470)
▶️ஊராட்சி ஒன்றியம்- (10)
▶️கிராம பஞ்சாயத்து- (254)
▶️MP தொகுதி- (1)
▶️MLA தொகுதி- (5)
▶️மொத்த பரப்பளவு – 4497.77 ச.கி.மீ
▶️ மக்கள் தொகை- 15,06,843
▶️ இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!

News August 13, 2025

தருமபுரி மாவட்டத்தில் மின் தடை

image

கடத்தூர், ஆர்.கோபிநாதம்பட்டி, இராமியணஹள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதனால், பசவபுரம், பொம்பட்டி, பூதநத்தம், சிந்தல்பாடி, மணியம்பாடி, நவலை, ஆண்டிப்பட்டி, நத்தமேடு, புளியம்பட்டி, தென்கரைக்கோட்டை, ரேகடஹள்ளி சுற்றுவட்டார பகுதியில் நாளை காலை 9 மணி -பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனே ஷேர் பண்ணுங்க.

News August 13, 2025

தர்மபுரி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் ஆட்சியர் அறிவிப்பு

image

சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் ஆணையரின் அறிவுரைப்படி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளிலும் ஆகஸ்ட் 15 அன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இக்கூட்டத்தில் பொதுமக்கள், வாக்காளர்கள், மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சதீஸ் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!