News August 11, 2025
தருமபுரி மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட் 11) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் வெளியிட்டுள்ளது. தலைமை அதிகாரியாக
S. பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி புவனேஸ்வரி, அரூர் கிருஷ்ண லீலா, பென்னாகரம் செல்வமணி , மற்றும் பாலக்கோடு பாலசுந்தரம் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பொதுமக்கள் அவசர தேவை எனில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 11, 2025
விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் இலவசம்

தண்டகுப்பம் மற்றும் அரூர் நாற்றங்கால்களில் தேக்கு, மகாகனி, வேங்கை, ஈட்டி போன்ற உயர்தர மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன. அரூர், மொரப்பூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி, சாமிபுரம் பகுதி விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இலவசமாக மரக்கன்றுகளைப் பெறலாம். மேலும் விவரங்களுக்கு, வனவர் சந்திரசேகரை 9626934955 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
News August 11, 2025
தருமபுரியின் சிறப்பு உணவு எது தெரியுமா?

தருமபுரியின் சிறப்பு உணவுகள் பெரும்பாலும் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய சமையல் முறைகளை அடிப்படையாகக் கொண்டவை. அதில் நிப்பட் பெரிதும் பிரபலமானவை. அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, வறுத்த வேர்க்கடலை, கடலைப்பருப்பு, எள், சீரகம், மிளகாய்த்தூள், பெருங்காயம், உப்பு மற்றும் கறிவேப்பிலை ஆகியவை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது செரிமானத்திற்கும், உடல் வலிமைக்கும் உதவும் என்று கூறப்படுகிறது. ஷேர் பண்ணுங்க!
News August 11, 2025
தருமபுரி: 8வது போதும்.. கைநிறைய சம்பளத்தில் அரசு வேலை!

தருமபுரி மக்களே, தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தில், அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்பப்படவுள்ளது. ரூ. 15,700 முதல் ரூ. 50,000 வரை சம்பளம் வழங்கப்படும். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பிக்கும் முறை மற்றும் விவரங்களை அறிய 044-29520509 எண்ணுக்கு அலுவலக நேரங்களில் அழைக்கலாம். கடைசி தேதி 16.08.2025 ஆகும். SHARE IT