News April 12, 2025
தருமபுரி மாவட்டத்தில் 135 பணியிடங்கள் அறிவிப்பு

தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 135 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. வட்டாரம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்படவுள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை, அந்தந்த வட்டார அலுவலகங்களில் இனசுழற்சி வாரியாக தகவல் பலகையில் ஒட்டப்படும் என ஆட்சியர் சதிஷ் தகவல் தெரிவித்துள்ளார். *செம வாய்ப்பு. தெரிந்த பெண்களுக்கு பகிரவும்*
Similar News
News April 16, 2025
ஜாக்கிரதை! ஒரு க்ளிக் உங்கள் வாழ்க்கையை மாற்றலாம்!

அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள். குழந்தைகள், பெரியவர்களிடம் செல்போனை கொடுக்கும் போது கனவமாக இருங்க. ஷேர் பண்ணுங்க
News April 16, 2025
தருமபுரியில் மழைக்கு வாய்ப்பு!

தர்மபுரி மாவட்டத்தில் இன்று நன்பகல் 12 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த சில நாட்களாக தருமபுரியில் உள்ள நல்லம்பள்ளி பாலக்கோடு, பென்னாகரம், அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் வெளியில் செல்வோர் குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை மறக்காமல் எடுத்து செல்லவும். ஷேர் பண்ணுங்க
News April 16, 2025
மீன் பிடிக்க சென்ற வாலிபர் சடலமாக மீட்பு

கொங்கவேம்பு அருகே உள்ள வள்ளுவர்புரம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 35). இவர் நேற்று மது போதையில் அங்குள்ள கிணற்றில் இறங்கி மீன் பிடிக்க சென்றுள்ளார். அப்போது மது போதையில் தவறுதலாக கிணற்றில் விழூந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அரூர் தீயணைப்புத் துறையினர் கோவிந்தசாமியின் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.