News November 1, 2025

தருமபுரி: மாரத்தான் போட்டியை துவக்கி வைத்த கலெக்டர்

image

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இன்று (நவ.01) , தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இருந்து ஆட்சியர் சதீஷ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் மாரத்தான் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தனர். மேலும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவிகளுக்கு ஐந்து கிலோ மீட்டர் தூரமும், 27 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களுக்கு ஏழு கிலோமீட்டர் தூரமும் மாரத்தான் நடைபெற்றது.

Similar News

News November 1, 2025

தருமபுரி மாவட்டத்தில் மின் நிருத்தம்!

image

தருமபுரி மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான மின் நிறுத்த தேதி தன்கேட்க்கோ அறிவித்துள்ளது. அதன்படி நவ.01 அரூர் மற்றும் இலக்கியம்பட்டி. 5ம் தேதி மாம்பட்டி. 7ம் தேதி அதியமான் கோட்டை. 11ம்தேதி பொம்மிடி.13ம் தேதி ராமியானஅல்லி.15ம் தேதி பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம், தருமபுரி.18ம் தேதி சொகத்தூர், வெள்ளிச்சந்தை. 20ம் தேதி மொரப்பூர். 27ம் தேதி பென்னாகரம் ஆகிய தேதிகளில் 9am – 2pm வரை மின்னிருத்தம்.

News November 1, 2025

தருமபுரியில் 241 ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

image

தருமபுரி மாவட்டத்தில் 241 கிராம ஊராட்சிகளிலும் 01/11/2025 இன்று காலை 11.00 மணி அளவில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து ஊராட்சியில் உள்ள வாக்காளர்கள் பொது மக்கள் மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

News November 1, 2025

தருமபுரி: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே<> இங்கே கிளிக் <<>>செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!