News November 19, 2024
தருமபுரி மருத்துவமனைக்கு ஆட்சியர் உத்தரவு

தருமபுரி மாவட்டத்தில் மகப்பேறு மரணம் நிகழ்ந்த மருத்துவமனையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அதன் பிறகு அம்மருத்துவமனையின் தரம் Level3-ல் இருந்து Level2ஆக தரயிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் அம் மருத்துவமனையில் (Complicated High Risk) தாய்மார்களுக்கு மகப்பேறு சிகிச்சை அளிக்கக்கூடாது என தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி உத்தரவின்பேரில் நேற்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News September 24, 2025
தருமபுரி அருகே லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

பாலக்கோடு அடுத்த பெத்தனஅள்ளி கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் மணிகண்டன் (38) வயிற்று வலியால் அவதிபட்டு வந்துள்ளார். பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் நேற்றிரவு வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பாலக்கோடு போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி ஜி.ஹெச்-க்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர்.
News September 24, 2025
தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (செப்.23) இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக ராஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News September 23, 2025
தருமபுரியில் ரூ.1.12 கோடி ஓய்வூதியம் வழங்கல்

தருமபுரியில் கடந்த நான்கு ஆண்டுகளில், முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கான ஓய்வூதியமாக 191 நபர்களுக்கு மொத்தம் ரூ.1.12 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஓய்வூதிய உதவி, சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட நிலையில் “இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்” தமிழகத்திற்கு வாழ்வாதாரத்திற்கான நம்பிக்கையையும் பாதுகாப்பையும் வழங்குகிறது என தருமபுரி மாவட்டம் ஆட்சியர் ரெ. சதீஷ் தெரிவித்துள்ளார்.