News November 23, 2025
தருமபுரி: மது பாட்டில்கள் விற்ற பெண் கைது!

தருமபுரி மாவட்டம், குடியாத்தம் அடுத்த மேல்பட்டி ரோடு கார்த்திகேயபுரம் பகுதியில் கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்கப்படுவதாக குடியாத்தம் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் நேற்று (நவ.23) ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சரண்யா (31) என்பவர் வீட்டின் பின்பக்கம் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து கைது செய்தனர்.
Similar News
News November 24, 2025
வேலூர்: குறைந்த விலையில் வாகன ஏலம்!

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 81 இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் 3 நான்கு சக்கர வாகனங்கள் உடைக்க தகுதியுள்ள நிலையில் (scrab) வரும் நவம்பர் 26-ம் தேதி காலை 9 மணிக்கு வேலூரில் உள்ள நேதாஜி விளையாட்டு மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. இதில் பங்கேற்க ரூ.100 கட்டணம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்கலாம் என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தெரிவித்துள்ளார்.

வேலூர்: ஆட்டோ மீது கார் மோதி விபத்து – பெண் பலி

வேலூர்: வல்லண்டராமம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு (நவ.23) முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்தது. ஆட்டோவில் பயணம் செய்த ஜெயந்தி (54) என்பவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.