News February 7, 2026
தருமபுரி: மதுபானம் விற்ற 23 பேர் கைது!

தருமபுரி, அரூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் வசந்தா தலைமையில் ஜனவரி மாதம் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில் கள்ளச்சாராயம் காய்ச்சியது, மது பாட்டில்களை பதுக்கி விற்றது மற்றும் ஹோட்டல்களில் மது அருந்த அனுமதித்ததாக 2பெண்கள் உட்பட 23பேர் கைது செய்யப்பட்டனர். பின், கள்ளச்சாராயம் மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Similar News
News February 10, 2026
தருமபுரி: அரசு பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்!

சோமனஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு மாணவர்கள் சிலர் கடந்த 5-ந் தேதி வகுப்பறையில் கணினி ஆய்வக உதவியாளர் தூண்டுதலினால் இரும்பு ஸ்கேலில் மாறி மாறி அடித்துக் கொண்டனர். இதில் காயமடைந்த மாணவர்களுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதால் பெற்றோர் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலக்கோடு போலீசார் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் பெற்றோர் கலைந்து சென்றனர்.
News February 10, 2026
தருமபுரியில் பயங்கர தீ!

ஆலமரத்துப்பட்டியில் பட்டாசு தொழிற்சாலையின் குடோனுக்கு நேற்று முன்தினம் (பிப்.8) தொழிலாளி மாசிலாமணி (55) சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு வெடித்ததில் குடோன் தீ பிடித்தது. இதில் அவர் படுகாயமடைந்தார். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் பட்டாசுகளை இருப்பு வைக்க அனுமதியின்றி கோழி பண்ணையை குடோனாக பயன்படுத்திய சக்திவேல் (39) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 10, 2026
தர்மபுரி : ரோந்து பணி காவலர்கள் விவரம்

தருமபுரி மாவட்டத்தில் இன்று (பிப்- 09) இரவு முதல் நாளை காலை (பிப்- 10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


