News September 17, 2025

தருமபுரி: மக்களின் உரிமைக்காக போராடிய போராளி மரணம்

image

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்தவரும், தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காகப் பல்வேறு போராட்டங்களை நடத்தியவருமான பி.வி.கரியமால் (98), வயது மூப்பின் காரணமாக நேற்று மாலை (செப். 16) காலமானார். தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆலய நுழைவுப் போராட்டங்களிலும் பங்கேற்று சமூகப் பங்களிப்பு செய்தவர். அவரது மறைவுக்குப் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News September 17, 2025

தருமபுரி: ஒரு செயலி போதும்! அத்தனை பிரச்னைகளும் தீர்வு

image

<>”மெரி பஞ்சாயத்து” மொபைல் செயலி<<>> மூலம் கிராம மக்கள் இனி எல்லா விதமான புகார்களையும் நேரடியாகப் பதிவு செய்யலாம். இதில் உள்ள ‘Grievance/Complaint’ பிரிவில் பெயர், கிராமம் மற்றும் புகார் விவரங்களை உள்ளீடு செய்து, தேவையான ஆவணங்களையும் இணைக்கலாம். புகார் செய்தவுடன் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் புகாரின் நிலை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களை நேரடியாகக் கண்காணிக்க முடியும். ஷேர்

News September 17, 2025

தர்மபுரி: அரசு வாகனம் ஏலம்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்ட ஜீப் (TN07G0240) வாகனத்தை அக்டோபர் 09-ஆம் தேதி காலை 11 மணிக்கு ஏலம் விடப்படும் எனவும் ஏலத்துக்கான ஆரம்ப விலை ரூ.22,000 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் பங்கேற்க விரும்பும் நபர்கள், விலைப்புள்ளியை அளித்து வாகனத்தை ஏலம் எடுக்கலாம் என என தர்மபுத்தி மாவட்ட ஆட்சியர் சதீஷ் அறிவித்துள்ளார்.

News September 17, 2025

தர்மபுரி: அரசு வாகனம் ஏலம்

image

தருமபுரி TN07G0240 பயன்பாட்டில் இருந்த ஈப்பு வாகனம் ரூ.22,000/- ற்கு ஏலம் விட ஆரம்ப தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேற்படி கழிவு செய்யப்பட்ட 01 ஈப்பு வாகனத்தினை 9ம் தேதி அன்று முற்பகல் 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏலம் விடப்படவுள்ளது. ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஏலத்தில் கலந்து கொண்டு விலைப்புள்ளியை தெரிவித்துக்கொள்ள கோரலாம் ஆட்சியர் சதீஷ் தெரிவித்தார்.

error: Content is protected !!