News December 27, 2025
தருமபுரி பொதுமக்களுக்கு HAPPY NEWS!

ஈரோடு – சென்னை இடையேயான ஏற்காடு எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டிலிருந்து வழக்கமாக இரவு 9 மணிக்கு புறப்படும் ரயில்(22650) ஜன.1-ம் தேதி முதல் 9:45 மணிக்கு புறப்படவுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள பொம்மிடி ரயில் நிலையத்தில் இரவு 10:34-க்கு பதிலாக 11:19-க்கும், மொரப்பூரில் 10:59-க்கு பதிலாக 11:39-க்கும் நின்று செல்லும். இந்த ரயில் காலை 4:25 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும்.
Similar News
News December 27, 2025
தருமபுரி: வேலை தேடும் இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!

தருமபுரி, செட்டிகரையில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரியில். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 5ஜி தகவல் தொடர்பு தொழில்நுட்பம் 18 வார பயிற்சி வழங்கப்பட உள்ளது. டிகிரி அல்லது டிப்ளமோ ECE , EEE, TELECOM, CSE போன்ற படிப்பை முடித்த, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயதிற்கு உட்பட்ட ஆண், பெண் இருவருமே விண்ணப்பித்து பயன்பெறலாம். இதில் பயிற்சி பெற்ற அனைவருக்கும் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். ஷேர்!
News December 27, 2025
தருமபுரி: டிகிரி முடித்தால் போதும் சூப்பர் வேலை ரெடி!

1. SBI வங்கியில் 996 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2. கல்வித்தகுதி: எதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். 3. மாத சம்பளம் ரூ.51,000 என அறிவிக்கப்பட்டுள்ளது. 4. விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News December 27, 2025
தீர்த்தமலையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட MLA!

தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் சிறப்பு பெயர் சேர்த்தல், நீக்கம் ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் இன்று (டிச.27) அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தீர்த்தமலையில், அரூர் MLA வே.சம்பத்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் அம்மன் ரவி, ராம்கி மற்றும் முக்கிய நிர்வாகிகள் இருந்தனர். பின், மக்கள் நிரப்பும் படிவங்களை மேற்பார்வையிட்டார்.


