News January 20, 2026

தருமபுரி: பொங்கல் விழாவில் தகராறு – அதிமுக பிரமுகர் கைது!

image

தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே மாதேஹள்ளியில் பொங்கல் திருவிழா நடத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், வேலாயுதம் என்பவரது குடும்பத்தினரை அதிமுக நிர்வாகி தர்மன் உள்ளிட்ட 6 பேர் தாக்கியுள்ளனர். பின், பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், அதிமுக செயலாளர் தர்மன் உட்பட 6 பேர் மீது கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களைக் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News January 20, 2026

தருமபுரி: House Owner தொல்லையா? உடனே CALL

image

தருமபுரியில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE IT!

News January 20, 2026

தருமபுரியில் அதிரடி ஆய்வு!

image

தருமபுரி உணவு பாதுகாப்பு துறை சார்பில் நேற்று (ஜன.19) மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. நேற்று இரவு மாவட்ட நியமன அலுவலர் கைலாஷ்குமார், தருமபுரி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் நகராட்சி நகர் நல அலுவலர் லட்சியவர்ணா உள்ளிட்ட குழுவினர் ராஜகோபால் பூங்கா அருகே உள்ள தள்ளுவண்டி மற்றும் துரித உணவு கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

News January 20, 2026

தருமபுரி: உங்கள் ரேஷன் அட்டை ரத்தாக வாய்ப்பு!

image

ரேஷன் அட்டையில் உள்ள உறுப்பினர்கள் e-KYC அப்டேட் செய்யாவிட்டால், அந்த குறிப்பிட்ட உறுப்பினரின் பெயர் நீக்கப்படவோ அல்லது ரேஷன் அட்டை முடக்கப்படவோ வாய்ப்புள்ளது. போலி அட்டைகளைத் தவிர்க்க, உண்மையான பயனாளிகளைக் கண்டறிய உங்கள் ரேஷன் கடைக்கு நேரடியாக சென்று கைரேகை வைத்து அப்டேட் செய்யவேண்டும். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அரசு உதவி எண் 1800 425 5901-ஐ அழைக்கலாம். உடனே இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!