News December 7, 2025
தருமபுரி: பைக்கில் வந்து ஆடு திருடிய 3 பேருக்கு வலை!

அரூர் அடுத்த மேலானூர் பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம். நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் வீட்டின் அருகே நாய் குரைத்துள்ளது. இதனால் தர்மலிங்கத்தின் மனைவி பாரதி வெளியே வந்து பார்த்தபோது 3 பேர் மாட்டு கொட்டகையில் இருந்த 3 ஆடுகளை திருடிக்கொண்டு டூவீலரில் தப்பிச்செல்ல முயன்றனர். அவர்களை பிடிக்க முயன்ற போது, அந்த நபர்கள் தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து அரூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 11, 2025
தருமபுரி: தொடரும் குட்கா விற்பனை…போலீஸ் அதிரடி!

தருமபுரி- பென்னாகரம் மேம்பாலத்தில், கார் ஒன்று வேகமாக வந்ததை கண்டு, சந்தேகம் அடைந்த நகர போலீசார், காரை நிறுத்துமாறு கூறினர். அப்போது, காரை நிறுத்திய நபர், போலீசாரை பார்த்ததும் காரில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தார். பின்னர், போலீசார் அந்த காரை சோதனை செய்ததில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 474 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, இன்று (டிச.11) போலீசார் கார் & குட்காவை பறிமுதல் செய்தனர்.
News December 11, 2025
தருமபுரி: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

தருமபுரி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News December 11, 2025
தருமபுரி: ரேஷன் அட்டை குறைகளுக்கு இனி அலைய வேண்டாம்

தருமபுரி மாவட்ட மக்களே! ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் இந்த <


