News February 9, 2026
தருமபுரி: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க!

அரசு பேருந்தில் பயணிக்கும் போது உங்க Luggage-ஐ மறந்துவிட்டு இறங்கிவிட்டால் பதட்டப்பட வேண்டாம். 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கு இருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன பொருளை தவறவிட்டீர்கள் என்ற விவரங்களுடன் டிக்கெட்டின் விவரத்தை கூறினால் போதும். அந்த பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து Luggage-ஐ வாங்க வேண்டுமென கூறுவார். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Similar News
News February 15, 2026
தருமபுரி: உழவர் சந்தை விலை நிலவரம்!

தருமபுரி உழவர் சந்தையின் இன்றைய (பிப்.15) காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) தக்காளி: ரூ.8, கத்தரிக்காய்: ரூ.20, வெண்டைக்காய்: ரூ.25, முள்ளங்கி: ரூ.15, அவரைக்காய்: ரூ.30, கொத்தவரை: ரூ.50, பச்சைமிளகாய்: ரூ.60, பப்பாளி: ரூ.36, கொய்யா: ரூ.40 மற்றும் முருங்கைக்கீரை (50 கிராம்) ரூ.15 என விற்பனை செய்யப்படுகின்றன.
News February 15, 2026
அறிவித்தார் தருமபுரி ஆட்சியர்!

தருமபுரி மாவட்ட பள்ளி கல்வித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து நடத்தும் 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நாளை (பிப்.16) நடைபெற உள்ளது. தருமபுரி நகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் காலை 9:30 முதல் 1 மணி வரை முகாம் நடைபெற உள்ளது. எனவே இந்த வாய்ப்பை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.
News February 15, 2026
தருமபுரியில் துடிதுடித்து பலி!

அரூர் அருகே உள்ள குள்ளனூரை சேர்ந்த கட்டிட தொழிலாளி சதீஷ் (25). இவர் பைக்கில் சிக்களூர்-தெத்தேரி சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென கீழே தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அப்பகுதி மக்கள் அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் இறந்து விட்டது தெரியவந்தது. இது குறித்து கோட்டப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


