News December 14, 2025
தருமபுரி: பெற்ற மகளை பொய் சாட்சியாக்கிய ஆசிரியர்!

தருமபுரியை சேர்ந்த அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர் சரவணன் (45). இவரது மகள் 10ம் வகுப்பு படிக்கிறார். சரவணன், ஜூன்-16ல், தன் நண்பர்கள் இருவர், மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். பின் நீதிமன்றத்தில் சிறுமி அளித்த வாக்குமூலத்தில், நண்பர்களை பழி வாங்க, தன் தந்தை சரவணன் பொய் புகார் கொடுத்ததாக கூறினார். இதையடுத்து, சரவணனை போக்சோவில் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
Similar News
News December 14, 2025
தருமபுரி: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (டிச.14) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சூர்யா தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் நாகராஜ் , தோப்பூரில் கேசவன், மதிகோன்பாளையத்தில் சின்னசாமி மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். இரவு வேலை செய்யும் பெண்களுக்கு பகிரவும்.
News December 14, 2025
தருமபுரி: ரூ.1.1 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் டிஆர்டிஓ-வில் 17 வகை பிரிவுகளின் கீழ் 764 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஐடிஐ, டிப்ளமோ, BE, B.Sc படித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.19,900-ரூ.1,12,400 வரை வழங்கப்படும். 18-28 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. விருப்பமுள்ளவர்கள் ஜன.1ஆம் தேதிக்குள்<
News December 14, 2025
தருமபுரி: Certificate இல்லையா? கவலை வேண்டாம்!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம்.


