News October 25, 2025
தருமபுரி பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு

தருமபுரியில் இன்று (அக்.25) அனைத்து பள்ளிகளும் செவ்வாய்க்கிழமை அட்டவணைப் படி பணி நாளாக செயல்படும் என தர்மபுரி முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். தீபாவளிக்கு அக்.21 அன்று அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில் தருமபுரியில் உள்ள அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும். ‘ நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க”
Similar News
News January 27, 2026
தருமபுரி: தறிகெட்டு ஓடிய பைக்; பறிபோன உயிர்!

திருவண்ணாமலையை சேர்ந்த தொழிலாளி மணிகண்டன் (26). இவர், தருமபுரி, கல்லாடிப்பட்டியில் தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில் மணிகண்டன் பைக் ஓட்ட ரமேஷ் பின்னால் அமர்ந்து லிங்காபுரம் நோக்கி சென்றனர். இதில் கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோர மரத்தில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து அரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 27, 2026
தருமபுரி: Insta காதலால் சிறுமி கர்ப்பம்!

சேலத்தை சேர்ந்த +1 படித்து வந்த மாணவிக்கும் தருமபுரி மாவட்டம், பத்திரெட்டிஅள்ளியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் நந்தகுமாருக்கும் (28) Instagram மூலம் காதல் மலர்ந்தது. கடந்த ஜூன் 8-ந் தேதி நந்தகுமார் மாணவியை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து தற்போது சிறுமி 5 மாத கர்ப்பமாக உள்ளார். இதையடுத்து நந்தகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 27, 2026
தருமபுரி: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று ஜன.26 இரவு முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் ராஜசுந்தர் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் நாகராஜன் , தொப்பூரில் ராமகிருஷ்ணன் , மதிகோன்பாளையத்தில் சிவகுமார் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!


