News December 25, 2025
தருமபுரி: தலை நசுங்கி கொடூர பலி!

தருமபுரி, முக்கல்நாய்க்கன்பட்டியை சேர்ந்தவர சிவகுமார்(43), கார்ப்பென்டர். இவர் கடந்த 21ம் தேதி பெங்களூருவில் உள்ள அவருடைய அண்ணன் சக்திவேலை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.அண்ணனை பார்த்துவிட்டு இரவு 11மணிக்கு வீடு திரும்பியபோது பெங்களூரு – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி, சிவகுமார் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும்,புகார் படி போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 25, 2025
தருமபுரி: தொப்பூர் அருகே தொடரும் விபத்து!

தருமபுரி, நல்லம்பள்ளி தொப்பூர் கட்டமேடு அடுத்துள்ள கணவாய் பகுதியில், இன்று (டிச.25) விடியற்காலை காலை 2 மணி அளவில் கனரக வாகனா லாரி தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளாது. இதில், வாகன ஓட்டுநர் சிறிய காயங்கள் இன்றி உயிர் தப்பினார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி, சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு நேர்ந்தது. இதனை அப்பகுதி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 25, 2025
தருமபுரியில் நாட்டு வெடிகுண்டு வைத்து பரபரப்பு!

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள எலுமிச்சனஅள்ளி காப்புகாட்டில் முயல், காட்டுபன்றி உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாட அந்தேரிகாடு கிராமத்தை சேர்ந்த சேட்டு (45), மாது (45) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு நாட்டு வெடிகுண்டுகளை வைத்து விட்டு வந்துள்ளனர். இதனை அறிந்த வனத்துறையினர், வெடிகுண்டுகளை கைப்பற்றி இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின், தருமபுரி சிறையில் அடைத்தனர்.
News December 25, 2025
தருமபுரி: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு (டிசம்பர்.24) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும். காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!


