News November 11, 2025
தருமபுரி: டூவீலர் மீது கார் மோதியதில் இளைஞர் பலி!

தருமபுரி, இண்டூர் அருகேயுள்ள நாகலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நவீன் (25) இவர் ஓசூரில் உள்ள கல்குவாரியில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், நேற்று (நவ.10) இண்டூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது, அவ்வழியே வந்த கார் மீது மோதி தூக்கியெறிப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு, அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இவர் உயிரிழந்தார்.
Similar News
News November 11, 2025
தருமபுரி: இன்று எங்கெல்லாம் கரண்ட் கட்!

பொம்மிடி, வே.முத்தம்பட்டி, கே.என்.புதூர் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (நவ.11) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பொம்மிடி, அஜ்ஜம்பட்டி, பி.பள்ளிப்பட்டி, வாசிக்கவுண்டனூர், பொ.துரிஞ்சிபட்டி, நடூர், ஒட்டுபட்டி, பில்பருத்தி, ஆகிய சுற்றுவட்டார பகுதியில் நாளை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்து மற்றவர்களை அலெர்ட் பண்ணுங்க!
News November 11, 2025
தருமபுரி: இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (நவ.10) இரவு முதல் இன்று காலை வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சூர்யா தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சரவணன், தோப்பூரில் குமரவேல், மதிகோன்பாளையத்தில் மகாலிங்கம் மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.
News November 10, 2025
தருமபுரியில் உலக அமைதி தின பேரணி

நாளை உலக அமைதி தினத்தை (11-11-2025) முன்னிட்டு, ஒருங்கிணைந்த கிராமப்புற கல்வி அறக்கட்டளை & கிராம விழிகள் அறக்கட்டளை இணைந்து, இன்று (நவ.10) தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் இருந்து அமைதிப் பேரணி நடைபாதையாக நடைபெற்றது. இது தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து மருத்துவமனை வரை நடைபெற்றது. இதில் மருத்துவத் துறைகளில் பயிலும் மாணவ, மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.


