News October 26, 2025
தருமபுரி: சிறப்பு கிராம சபை கூட்டம் ஆட்சியர் அறிவிப்பு

நவம்பர் மாதம் 01ஆம் தேதி சனிக்கிழமை மாவட்டத்தில் உள்ள 249 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாகவும், இதில் பல்வேறு பொருட்கள் குறித்து விவாதம் செய்ய இருப்பதால் கிராம ஊராட்சியில் உள்ள பொதுமக்கள், சுய உதவி குழுவினர், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம் என தர்மபுரி ஆட்சித் தலைவர் சதீஷ் இன்று அக். 25 வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 22, 2026
தருமபுரி: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News January 22, 2026
தருமபுரியில் இன்று மின் தடை; உங்க எரிய இருக்கா?

தருமபுரியில் பென்னாகரம் மற்றும் மொரப்பூர் துணை மின் நிலையங்களுக்குட்டபட்ட பகுதிகளில் இன்று (ஜன.22) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாகதாசம்பட்டி, பாப்பரப்பட்டி, ஏரியூர், பெரும்பாலை, ஒகேனக்கல், தாசம்பட்டி, நல்லாம்பட்டி, மொரப்பூர், நைனாகவுண்டம்பட்டி, ராசலாம்பட்டி, சென்னம்பட்டி, கிட்டனூர், நாச்சினாம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் காலை 9 முதல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.
News January 22, 2026
தருமபுரி :உழவர் சந்தை விலை நிலவரம்!

தருமபுரி உழவர் சந்தையில் இன்றைய (ஜன.22) காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) தக்காளி: ரூ.24, கத்தரிக்காய்: ரூ.10, வெண்டைக்காய்: ரூ.16 முள்ளங்கி: ரூ.16, அவரைக்காய்: ரூ.18, கொத்தவரை: ரூ.60, பச்சைமிளகாய்: ரூ.40, பப்பாளி: ரூ.30, கொய்யா: ரூ.50 மற்றும் முருங்கைக்கீரை (50-கிராம்) ரூ.15 என விற்பனை செய்யப்படுகின்றன.


