News October 31, 2025

தருமபுரி: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

image

தருமபுரி மாவட்டத்தில் தற்போது மழை பெய்து வருவதால் கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News November 1, 2025

தருமபுரி: காவல்துறை இரவு ரோந்து விபரம்

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் (அக்.31) இரவு 9 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. காவலர் சூர்யா தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்

News November 1, 2025

தருமபுரியில் தாயுமானவர் திட்டம்

image

தமிழக முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உட்பட 37,770 பயனாளிகளின் இல்லத்திற்கு நேரில் சென்று பொது விநியோகத் திட்ட பொருட்கள் மாதம் தோறும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு நவம்பர் மாதத்திற்குரிய பொது விநியோகத் திட்ட பொருட்களை எதிர்வரும் நவம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதி வழங்கப்படும். என தருமபுரி ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News October 31, 2025

தருமபுரி: பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்!!

image

தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர் அறிவது. முன்னாள் படைவீரர்களின் 40 வயதிற்குட்பட்ட மனைவி / கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்களுக்கு இலவசமாக தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளது. இதனால், மேற்காணும் தகுதியுள்ள முன்னாள் படைவீரர்களின் சார்ந்தோர்கள் தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை அணுகி பயன் அடையுமாறு ஆட்சியர் தெரிவித்தார்.

error: Content is protected !!