News March 19, 2024
தருமபுரி கலெக்டர் உத்தரவு

தருமபுரி மாவட்டத்தில் இன்று 18 அனைத்து படைக்கல உரிமைதாரர்களும், படைக்கலன்களை அவர்களுடைய இருப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் பாதுகாப்பாக ஒப்படைத்து உரிய ஒப்புதல் சீட்டு பெற்றுக் கொள்ளவேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் முடிவுபெறும் தினத்திலிருந்து ஒரு வாரத்திற்கு பின்னர் தங்களது பொறுப்பில் திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 3, 2025
தருமபுரியில் ஒரு ஊட்டி

மேலே நீங்கள் பார்க்கும் படம் ஊட்டியோ, கொடைக்கனலோ அல்ல. கிழக்குத்தொடர்ச்சி மலைகளுள் ஒன்றான சித்தேரிமலை தான். தருமபுரி பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள சித்தேரிமலை பசுமையான காடுகளையும், அழகிய மலை தொடர்களையும் செல்லும் வழி எங்கும் ரசித்துக் கொண்டே செல்லலாம். தற்போது வெயில் வாட்டி வைத்து வரும் நிலையில், இங்கு குடும்பத்துடன் சென்றால் அமைதியான சூழலில் பொழுதை கழிக்க இது ஒரு நல்ல ஸ்பாட். ஷேர் பண்ணுங்க
News April 3, 2025
ரயில்வே வேலை: ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பளம்

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திய சரக்கு வழித்தட கழகம் (DFCCIL) நிறுவனத்தில் 642 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூனியர் மேனேஜர், எக்சிகியூட்டிவ், மல்டி டாஸ்க் ஸ்டாப் என பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். 2 கட்ட கணிணி வழி எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு இருக்கும். ஷேர் செய்யுங்கள்
News April 3, 2025
டூவீலரில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த நம்பிப்பட்டி சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன்கள் வீரமணி (42), அழகிரி (40). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம், டூவீலரில் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது வேப்பநத்தம் – ஈச்சம்பாடி செல்லும் சாலையில் வந்தபோது, திடீரென டூவீலரில் இருந்து இருவரும் தவறி கீழே விழுந்தனர். இதில் படுகாயமடைந்த வீரமணி பரிதாபமாக உயிரிழந்தார்.