News April 12, 2024

தருமபுரி: கலெக்டர் உத்தரவு

image

தருமபுரி மாவட்டத்தில் வரும் 17.4.2024 அன்று காலை 10 மணி முதல் வாக்களிக்கும் நாளான 19.4.24 நள்ளிரவு 12 மணி வரை மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான 04.06.2024 ஆகிய நாட்களில் மதுபான கடைகளை மூடி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மீறி எவரேனும் செயல்பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மதுவிற்பனையில் ஈடுபட்டாலோ சட்டப்படியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Similar News

News April 18, 2025

சமையல் உதவியாளர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

image

தர்மபுரியில் காலியாக உள்ள 135 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. 21 – முதல் 40 வயது வரையுள்ள பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். கணவரை இழந்த, கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 10ஆம் வகுப்பு படித்த, தமிழில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய அலுவலகம்/ மாநகராட்சி/ நகராட்சி அலுவலகம் ஆகியவற்றில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். <>விண்ணப்பம்<<>>.

News April 18, 2025

பள்ளி மாணவி தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி

image

பெண்ணாகரம் வட்டம், நாகமரை ஊராட்சி ஏமனூர் அருகே ஊ.ஒ.ந.நி பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவன் சுசீதரன் என்பவர் மாணவி அனிதாவை கடுமையாக தாக்கியதால் மண்டை உடைந்து முகத்தில் காயம் ஏற்பட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பெண்ணை பாலியல் ரீதியாக தொல்லை செய்து வந்ததாகவும் மாணவன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியும் பள்ளி மாணவி சார்பில் ஏரியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

News April 18, 2025

பெண்களுக்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

image

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வரும் ஏப்ரல் 25  அன்று காலை 09:00 மணிக்கு தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் பெண்களுக்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்ட பெண்கள் 2023, 2024, 2025 ஆண்டுகளில் 12ஆம் வகுப்பு டிப்ளமோ,பட்டப்படிப்பு படிப்பை முடித்த மாணவிகளுக்கு மட்டும்  பங்கேற்கலாம் என கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!