News March 13, 2026

தருமபுரி: கணவன் அடித்தால் உடனே CALL!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, தருமபுரி மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9600941391-ஐ அலுவலக நேரங்களில் அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

Similar News

News April 7, 2026

தருமபுரி: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

image

தருமபுரி மக்களே, நீங்க போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா.? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம்.<> Mparivahan<<>> என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் அறிய 0120-4925505-ல் அழைக்கலாம். மறக்காம இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க.

News April 7, 2026

அரூர் அருகே தடுமாறி விழுந்தவர் உயிரிழப்பு

image

தருமபுரி மாவட்டம், அரூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன்(53). இவர் நேற்று முன்தினம் பைக்கில் சென்றபோது தீர்த்தமலை சாலையில் நிலைதடுமாறி விழுந்து படுகாயமடைந்தார். தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 7, 2026

தருமபுரி: 144 பேர் வேட்புமனு தாக்கல் – ஒரு பார்வை

image

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மொத்தம் 144 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 111 ஆண்கள் மற்றும் 33 பெண்கள் அடங்குவர். அதில், தருமபுரியில் அதிகபட்சமாக 36 பேரும், பென்னாகரத்தில் 32, பாலக்கோட்டில் 31, பாப்பிரெட்டிப்பட்டியில் 23 மற்றும் அரூரில் 22 பேரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

error: Content is protected !!