News March 19, 2024
தருமபுரி: ஓய்வு பெற்ற துணை தாசில்தார் பலி

தருமபுரி மாவட்டம் அரூர் கடைவீதியை சேர்ந்தவர் மோகன்குமார்(64). ஓய்வுபெற்ற துணை தாசில்தார். இவர் நேற்று சொந்த வேலை காரணமாக டூவீலரில் கருங்கல்பாடிக்கு சென்றுவிட்டு கூத்தாடிப்பட்டி அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த வளைவில் தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்த மோகன்குமாரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
Similar News
News November 1, 2025
தருமபுரி: மாரத்தான் போட்டியை துவக்கி வைத்த கலெக்டர்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இன்று (நவ.01) , தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இருந்து ஆட்சியர் சதீஷ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் மாரத்தான் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தனர். மேலும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவிகளுக்கு ஐந்து கிலோ மீட்டர் தூரமும், 27 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களுக்கு ஏழு கிலோமீட்டர் தூரமும் மாரத்தான் நடைபெற்றது.
News November 1, 2025
தருமபுரியில் 241 ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

தருமபுரி மாவட்டத்தில் 241 கிராம ஊராட்சிகளிலும் 01/11/2025 இன்று காலை 11.00 மணி அளவில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து ஊராட்சியில் உள்ள வாக்காளர்கள் பொது மக்கள் மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
News November 1, 2025
தருமபுரி: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே<


