News November 3, 2025
தருமபுரி: ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து சரிவு

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கணிசமாகக் குறைந்துள்ளது. நேற்று (நவ.01) இரவு விநாடிக்கு 8000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நீர்பிடிப்புப்பகுதிகளில் மழை குறைந்ததால் இன்று (நவ.02), ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் 6500 கனஅடியாகக் குறைந்துள்ளதாக மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மழைபெய்தால் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News November 3, 2025
சிப்காட் பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (நவ.03) தருமபுரி மாவட்டம், அதகபாடி கிராமம் மற்றும் நல்லம்பள்ளி வட்டம், தடங்கம், அதியமான்கோட்டை மற்றும் பாலஜங்கமனஹள்ளி ஆகிய கிராமங்களில் மொத்தம் 1,733 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடைபெற்று வரும் உட்புறசாலைகள், மழைநீர் வடிகால் மழைநீர் வடிகால் போன்ற உட்கட்டமைப்பு பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டார்.
News November 3, 2025
தருமபுரி: 12th PASS போதும்! ரூ.19,500 சம்பளம்!

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே கிளிக் செய்து நவ.16க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News November 3, 2025
தருமபுரி: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) தருமபுரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரிய படுத்துங்க.


