News October 29, 2025
தருமபுரி: ஒகேனக்கலில் குளிக்க அனுமதி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து சரிவு. நேற்று (அக்.28) மதியம் 2 மணி நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 9,500 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 16,000 கன அடியாக இருந்தது. தண்ணீர் வரத்து குறைந்ததால் ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கும், ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News October 29, 2025
தருமபுரி: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர்,
1. கூட்டு பட்டா
2. விற்பனை சான்றிதழ்
3. நில வரைபடம்
4. சொத்து வரி ரசீது
5. மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பின், 30-60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.
News October 29, 2025
தருமபுரி: வாரச்சந்தை வியாபாரிகள் கொண்டாட்டம்

தருமபுரி மாவட்டம்,நல்லம்பள்ளியில் செவ்வாய்க்கிழமையன்று வாரச்சந்தை நடப்பது வழக்கம். இதில், கிருஷ்ணகிரி, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, வியாபாரிகள் ஆடுகளை வாங்க, விற்க வந்திருந்தனர். இதனையொட்டி நேற்று (அக்.28) ஆட்டு சந்தையில், 600-ம் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் ஆடுகள் ரூ.5,000 முதல் ரூ.20,000 வரை மொத்தமாக, 1 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்ததாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.
News October 29, 2025
சட்டவிரோத மண் கடத்தல்: லாரி பறிமுதல்

இன்று அக்.28 காரிமங்கலம் மொரப்பூர் மேம்பாலம் அருகே கனிமவளத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த டிப்பர் லாரியை மடக்கினர். லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இந்த லாரி கரகப்பட்டியில் இருந்து சட்ட விரோதமாக மண் கடத்தி வந்தது தெரிந்தது. தொடர்ந்து அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


