News October 26, 2025

தருமபுரி: இளைஞர்களுக்கு ரூ.10 லட்சம் கடன்!

image

பிரதம மந்திரி ரோஸ்கர் யோஜனா (PMRY) திட்டம், 1993ல் தொடங்கப்பட்டது. படித்த வேலையற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை மானியக் கடன் வழங்குகிறது. உற்பத்தி, சேவை, வர்த்தகத் துறைகளில் கடன் வழங்கப்படும். 18-35 வயது வரையிலான, 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.15% வரை மானியமும், தொழில் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்படும். மாவட்ட தொழில் மையங்கள் மூலம் <>விண்ணப்பிக்கலாம்<<>>. ஷேர்!

Similar News

News February 14, 2026

தருமபுரியில் 3வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!

image

தருமபுரி அருகே எழிலரசி என்பவரின் 3 வயது பெண் குழந்தையை, அவரது 2வது கணவர் அய்யப்பன் (27) சித்ரவதை செய்துள்ளார். தங்களின் தனிமைக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, குழந்தையின் உடல் முழுவதும் தீயால் சூடு வைத்துள்ளார். இதில் காயமடைந்த குழந்தை தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் பாட்டி ரமணி அளித்த புகாரின் பேரில், டவுன் போலீசார் விசாரணை நடத்தி அய்யப்பனைக் கைது செய்தனர்.

News February 14, 2026

தருமபுரி மக்களே அச்சப்பட வேண்டாம் – காவல்துறை விளக்கம்!

image

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோயிலில் பிப்-23 இன்று தொடர் திருட்டு – மக்கள் அச்சம் என தனியார் செய்தி தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக உரிய சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால், பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம், என தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

error: Content is protected !!