News August 15, 2025

தருமபுரி: இலவச பயிற்சி மூலம் ரூ.4.5 லட்சம் வரை சம்பளம்

image

தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் 5G Communication Technology சான்றிதழ் படிப்பை இலவசமாக வழங்குகிறது. 70% நேரடி வகுப்பிலும், 30% ஆன்லைன் வழியாகவும் சுமார் 4000 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியின் மூலம் முன்னணி நிறுவனங்களின் பணி வாய்ப்பை பெறும் இளைஞர்களுக்கு வருடம் ரூ.4.5 லட்சம் சம்பளம் கிடைக்கும். 18 முதல் 35 வயது உடையவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதனை மற்றவர்களுக்கும் பகிரங்கள்!

Similar News

News November 14, 2025

சருமபுரி: குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழி

image

தருமபுரி பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் இன்று (நவ.14) வாசித்தார். பின் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவி மாணவியர்கள் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். உடன் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News November 14, 2025

குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் ஆட்சியர் கையெழுத்து

image

தருமபுரி பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், இன்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணி துவக்கி வைத்தார்கள். உடன் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.லோகநாதன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கலந்து கொண்டனர்.

News November 14, 2025

மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய ஆட்சியர்

image

தமிழ்நாடு துணை முதலமைச்சர், 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை குழந்தைகள் தினமான இன்று (நவ.14) வழங்கி துவங்கி வைத்தார். இதனை தொடர்ந்து, தருமபுரி, நல்லம்பள்ளி வட்டம், அதியமான்கோட்டை, அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், வழங்கி துவங்கி வைத்தார்கள்.

error: Content is protected !!