News March 1, 2026
தருமபுரி: இரவு ரோந்து ஆய்வாளர்கள் விவரம்

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (பிப்.28), இரவு முதல் இன்று காலை 6 மணி இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேரத்தில் பொதுமக்கள் அவசர கால உதவி எண் 100, அல்லது இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்த தகவலை மற்றவர்களிடம் ஷேர் செய்யவும்.
Similar News
News March 1, 2026
தருமபுரி: மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்

தருமபுரி: புலிக்கரை அருகே உள்ள மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா நேற்று(பிப்.28) நடைபெற்றது. இந்த விழாவில் தருமபுரி அதிமுக மாவட்ட கழக செயலாளர் கே. பி. அன்பழகன் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் பத்துக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பலரும் பங்கேற்றனர்.
News March 1, 2026
தருமபுரியில் அதிரடி கைது!

இண்டூர் சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், நேற்று(பிப்.28) மாலை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி இருந்த முனியப்பன், முருகன் ஆகியோரை சோதனை செய்த போது தலா 200 கிராம் கஞ்சாவை விற்க பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. கஞ்சா பொட்டலங்களை காவலர்கள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, இருவரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
News March 1, 2026
தருமபுரியில் இருவர் துடிதுடித்து பலி!

அங்கனாம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார்(26). இவர் அன்னசாகரம் பகுதியில் வெல்டிங் கடை நடத்தி வந்தார். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன் தினம் கீழ்காரஒணி சந்திப்பு சாலை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த ஹரிகிருஷ்ணன்(25) என்பவரின் பைக் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


