News January 17, 2026
தருமபுரி: இரவு ரோந்துப் செல்லும் காவலர்கள் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு – இன்று (ஜன.17) காலை வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் ராஜசுந்தர் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் ராமர், தொப்பூரில் கேசவன் , மதிகோன்பாளையத்தில் முத்து மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!
Similar News
News February 4, 2026
தருமபுரி: கேஸ் சிலிண்டர் இருக்கா? இது கட்டாயம்!

தருமபுரி மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)
News February 4, 2026
தருமபுரி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில்<
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
உடனே SHARE IT.
News February 4, 2026
தருமபுரியில் மூதாட்டியிடம் துணிகரம்!

பாப்பிரெட்டிப்பட்டி அருகே முள்ளிகாடை சேர்ந்த மூதாட்டி காளியம்மாள் (75). இவர் நேற்று முன்தினம் (பிப்.2) முள்ளிக்காடு மலை அடிவாரத்தில் கோயிலுக்கு சென்று திரும்பி வந்து கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த மர்ம நபர், மூதாட்டியை கீழே தள்ளி காதில் அணிந்திருந்த நகையை பறித்து தப்பினார். இதில் காயமடைந்த மூதாட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


