News October 11, 2025
தருமபுரி: ஆட்சியர் புதிய அறிவிப்பு!

தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் தெரிவித்ததாவது; 2025 ஆம் ஆண்டுக்கான பனை விதை நடவு திட்டத்தின் கீழ், மாவட்ட நிர்வாகம், வனத்துறை, சுற்றுச்சூழல் துறை மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து செப்டம்பர் 16 முதல் அக்டோபர் 15 வரை மொத்தமாக 8,35,500 பனை விதைகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கான முக்கியமான கட்டமாக அமையும்.
Similar News
News March 9, 2026
தருமபுரியில் 250 கோழிகள் இலவசம்!

தருமபுரி மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News March 9, 2026
தருமபுரி: BE/B.tech முடித்தால் ரூ.48,000 சம்பளம்!

தருமபுரி மாவட்ட பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <
News March 9, 2026
தருமபுரி மாவட்டம்- ஓர் பார்வை!

1. நகராட்சி- 1(தருமபுரி)
2. பேரூராட்சிகள்- 10
3. வருவாய் கோட்டம்- 2
4. தாலுகா-7
5. வருவாய் குறுவட்டம்- 23
6. வருவாய் கிராமங்கள்-479
7. ஊராட்சி ஒன்றியம்-9
8. கிராம பஞ்சாயத்து- 251
9. MP தொகுதி-1 ( தருமபுரி)
10. MLA தொகுதி- 5
11. மொத்த பரப்பளவு – 4497.77 ச.கி.மீ
இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!


