News January 17, 2026

தருமபுரி: அவசர உதவியா? இந்த 2 எண்கள் பொதும்!

image

தருமபுரி மக்களே போலீஸ் உங்கள் மீது தேவையற்ற வன்முறையில் ஈடுபட்டாலோ, ஆம்புலன்ஸ் சேவை, விபத்து, வன்முறை, சீண்டல் போன்ற எவ்வித அவசர உதவிக்கும் 112, 1070 ஆகிய ஹெல்ப் லைன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்களது புகார்களை தெரிவித்தால் உடனடியாக தீர்விற்கான உதவிகள் வழங்கப்படும். இந்த தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News January 28, 2026

தருமபுரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

தருமபுரி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி 1-ம் தேதி ராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அரசு மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். இதன்படி வரும் ஜனவரி 31-ம் தேதி இரவு 10 மணி முதல் பிப்ரவரி 3-ம் தேதி காலை 12 மணி வரை மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்து செய்யப்படும் மதுக்கூடங்கள் மற்றும் முன்னாள் படை வீரர் விற்பனை கூடங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

News January 28, 2026

தருமபுரி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில்<> cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். 2) பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். 3) இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். 4) பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

News January 28, 2026

தருமபுரி விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட ஆட்சியர்!

image

தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகம் அருகில் வட்டாரப் போக்குவரத்து துறையின் சார்பில் இன்று (ஜன.28) சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

error: Content is protected !!