News August 26, 2024
தருமபுரி அருகே மூதாட்டியிடம் தகராறு செய்த இளைஞர்கள்

மாரண்டஅள்ளி அடுத்த கரிக்குட்டனூர் கிராமத்தை சேர்ந்த லட்சுமி (60), நேற்று மலையடிவாரத்தில் ஆடு மேய்க்கும் போது ஆண்டிமுத்து (29), மருதன் (24) ஆகியோர் போதையில் மூதாட்டியை மது அருந்த அழைத்துள்ளனர். அதற்கு அவர் மறுக்கவே அவர்கள் இருவரும் அவரிடம் தகராறு செய்துள்ளனர். அலறல் சத்தம் கேட்டு அருகில் வந்தவர்கள் மூதாட்டியை மீட்டுள்ளனர். புகாரின் பேரில் இவர்மீது மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Similar News
News September 16, 2025
தர்மபுரியில் தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஊதியம் வழங்காததைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் இன்று காலை 9 மணி முதல் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஊதியம் கிடைத்த பிறகே பணிக்குத் திரும்புவோம் எனத் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
News September 16, 2025
தருமபுரி: டிகிரி இருந்தால் போதும்! ரயில்வேயில் வேலை

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <
News September 16, 2025
தருமபுரியில் ஊக்கத்தொகையுடன் திறன் மேம்பாட்டு பயிற்சி

தருமபுரியில் பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு செப்.18 முதல் கடகத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 7 நாட்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சியில் பங்கேற்போருக்கு சான்றிதழ், இலவச உணவுடன், ரூ.5,600 ஊக்கத்தொகையும் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!