News March 5, 2025

தருமபுரி அருகே சாலை விபத்தில் 3 பேர் பலி 

image

தருமபுரி பாலக்கோடு அருகே நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது கார் மோதிய விபத்தில் சிக்கியது. இதில் ஓசூர் அலசநத்தம் அதிமுக முன்னாள் கவுன்சிலர் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த இருவருக்கு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News

News August 20, 2025

தருமபுரி மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

image

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட் 20) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் வெளியிட்டுள்ளது‌. தலைமை அதிகாரியாக J. ராஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி‌ புவனேஸ்வரி, அரூர் கிருஷ்ண லீலா, பென்னாகரம் இளவரசி மற்றும் பாலக்கோடு வீரம்மாள் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பொதுமக்கள் அவசர தேவை எனில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர்

News August 20, 2025

தருமபுரியில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடுகள்

image

வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான முன்னேற்பாடுகள் மற்றும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சதீஸ் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் விநாயகர் சிலை தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினர். விழாவை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாடுவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

News August 20, 2025

தருமபுரியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

image

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தருமபுரியில் நாளை (ஆகஸ்ட் 21) நடைபெற உள்ளது. தருமபுரியில் உள்ள செங்குந்தர் திருமண மண்டபம், கடத்தூரில் உள்ள மீனாட்சி மஹால், பென்னாகரத்தில் உள்ள பிக்கிலி 4 சாலை திறந்தவெளி, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தடங்கம், பாலக்கோடு விபிஆர்சி கட்டிடம் கமலாம் பட்டி மற்றும் அரூரில் உள்ள அண்ணமார் திருமண மண்டபம் ஆகிய ஆறு இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்பட உள்ளன. ஷேர்!

error: Content is protected !!