News February 16, 2026
தருமபுரியில் 7,838 பேர் பயன் – ஆட்சியர் தகவல்!

தருமபுரி மாவட்டத்தில் இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ், விபத்தில் பாதிக்கப்பட்ட 7,838 நபர்கள் உரிய சிகிச்சை பெற்றுப் பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் இன்று (பிப்.15) தெரிவித்துள்ளார். இத்திட்டத்திற்காக மாவட்டத்தில் 5 அரசு மற்றும் 4 தனியார் மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டு, விபத்து கால அவசர சிகிச்சைகள் தடையின்றி வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News February 16, 2026
தருமபுரி: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

நில வரி வசூலிப்பது, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பொதுமக்களுக்கு கடன் வாங்கி கொடுப்பது ஆகியவை VAO-வின் வேலை ஆகும். இவற்றை முறையாக செய்யவில்லை என்றாலும், லஞ்சம் கேட்டாலும் இந்த நம்பரில் (04342-260042) புகார் அளிக்கலாம். ஷேர் செய்யுங்க.
News February 16, 2026
தருமபுரி: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

தருமபுரி மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News February 16, 2026
தருமபுரி: ஹோட்டல், டிபன் கடை தொடங்க ரூ.50,000 கடன்!

மத்திய அரசின் அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் மூலம் ஹோட்டல், டிபன் கடை, கேட்டரிங் தொழில் தொடங்க பெண்களுக்கு ரூ.50,000 கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த கடன் தொகையை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் (36 மாதங்கள்) கால அவகாசமும் வழங்கப்படுகிறது. கடனுக்கான முதல் தவணையை செலுத்த தேவையில்லை. மேலும் தகவல்களுக்கு மாவட்ட சமுக நல அலுவலரை (04342-233088) தொடர்பு கொள்ளவும்.


