News March 20, 2025
தருமபுரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

தருமபுரியில் மாா்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், சூப்பா்வைசா், மேலாளா், கம்ப்யூட்டா் ஆப்ரேட்டா், அக்கவுண்டன்ட், மெக்கானிக் போன்ற பணியிடங்களுக்கு ஆள்கள் தேவை என தனியாா் துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதில் 10,12th மற்றும் பட்ட படிப்பு படித்தவர்கள் நாளை காலை 10 மணிக்கு தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெறவுள்ள தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளுங்கள், ஷேர் பண்ணுங்கள்.
Similar News
News September 20, 2025
முதியோர் ஓய்வூதியத் திட்டத்தில் ரூ.193.03 கோடி வழங்கப்பட்டது

தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் 33,512 நபர்களுக்கு மொத்தம் ரூ.193.03 கோடி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் முதியோரின் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்து, அவர்களின் வாழ்க்கையில் நிம்மதியை ஏற்படுத்த உதவுகிறது என மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ் தெரிவித்தார்.
News September 20, 2025
மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 82.78 கோடி நிதி உதவி

தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில், சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 11,497 ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.82.78 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளின் பொருளாதாரச் சுமையைக் குறைத்து, அவர்கள் கண்ணியத்துடன் வாழ உதவுகிறது என்று மாவட்ட ஆட்சியர் ரெ. சதிஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
News September 20, 2025
தருமபுரியில் ஆதரவற்ற பெண்களுக்கு ரூ.15.11 கோடி ஓய்வூதியம்

தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில், ஆதரவற்ற மற்றும் கணவனால் கைவிடப்பட்ட 2,624 பெண்களுக்கு ரூ.15.11 கோடி ஓய்வூதியமாக வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பெண்கள் பாதுகாப்பான மற்றும் நிலையான வாழ்வாதாரத்தைப் பெறுவதோடு, சமூகத்தில் ஓர் அங்கமாக இயங்கி வருகின்றனர் என மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் தெரிவித்துள்ளார்.