News January 28, 2026
தருமபுரியில் பயங்கர தகராறு!

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி முஸ்லிம் தெருவில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் அமைக்கும் பணியின் போது, நில உரிமை தொடர்பாக மருமகள் சம்சுந்தாஜ் மற்றும் மாமனார் சோட்டா லால் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது மோதலாக மாறியதில் இரு தரப்பினரும் தாக்கி கொண்டனர்.காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருதரப்பு புகாரின் பேரில் 9 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
Similar News
News January 30, 2026
தருமபுரி: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். உடனே SHARE பண்ணுங்க.
News January 30, 2026
தருமபுரியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்!

தருமபுரி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (ஜன.30) நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் இந்த முகாமில் வேளாண்மை, நீர் பாசனம் மற்றும் பயிர் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் விவாதித்து வருகின்றனர். மேலும், நீர் மேலாண்மைத் திட்டங்களை விரைவுபடுத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
News January 30, 2026
தருமபுரியில் 3 குழந்தைகளின் தாய் விபரீத முடிவு!

நாகமரை கிராமத்தை சேர்ந்த மீனவர் பாலகிருஷ்ணன் (39). இவரது மனைவி கலைவாணி (29). தளபதிக்கு 1 மகன் மற்றும் இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக உடல்நல குறைவால் அவதிப்பட்ட கலைவாணி கடந்த 28-ந் தேதி மாலை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஏரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


