News December 6, 2024
தருமபுரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

தருமபுரி மாவட்டம் ஜோதி மஹால் திருமண மண்டபத்தில் தருமபுரி மாவட்ட ஆதிதிராவிடர்,பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன், மாவட்ட ஆட்சியர் சாந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் மணி, எம்எல்ஏ ஜிகே மணி, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News July 7, 2025
தருமபுரியில் நாளை மின் தடை 1/2

தர்மபுரி கோட்டத்திற்குட்பட்ட தர்மபுரி, சோலை கொட்டாய் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (ஜூலை.08) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் மதிகோன்பாளையம், கோட்டை, தர்மபுரி பஸ் நிலையம், கடைவீதி, அன்னசாகரம், விருபாட்சிபுரம், அளேதர்மபுரி, கடகத்தூர், கொளகத்தூர், குண்டல்பட்டி, ஏ.ஜெட்டிஅள்ளி, ஏ.ரெட்டிஅள்ளி, வி.ஜி.பாளையம், செட்டிகரை, நீலாபுரம், வெள்ளோலை,கோம்பை, ஏ.கொல்லஅள்ளி <<16972667>>தொடர்ச்சி<<>>
News July 7, 2025
தருமபுரியில் நாளை மின்தடை 2/2

குளியனூர், மொடக்கேரி, முக்கல்நாயக்கன்பட்டி, நூலஅள்ளி, குப்பூர், சோலைகொட்டாய், மூக்கனூர், கொட்டாவூர், மாரவாடி, செம்மாண்டகுப்பம், நாயக்கனஅள்ளி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை தர்மபுரி மின்வாரிய செயற்பொறியாளர் ஜெயா தெரிவித்துள்ளார். உங்க பகுதி மக்களுக்கு இந்த செய்தியை தெரியப்படுத்துங்க.
News July 7, 2025
ரூ.122.02 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள்

தருமபுரி, கடந்த 4 ஆண்டுகளில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 1,57,820 பயனாளிகளுக்கு ரூ.122.02 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள், கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ.சதீஸ் தகவல் அளித்துள்ளார். 2021-22 முதல் 2024-25 வரை 411 நபர்களுக்கு ரூ.10.74 இலட்சம் மதிப்பீட்டில் தையல் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.